பனாஜி,
கோவாவின் பனாஜி நகரில் சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த விழா 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இது 48வது சர்வதேச திரைப்படவிழா.
இந்த பிரமாண்ட விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைக்கிறார்கள்.
இந்த திரைப்பட விழாவில் 82 நாடுகளைச் சேர்ந்த 195 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன. பல உலக மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இதில் 64 இந்திய திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தவிர இந்தியன் பனோரமா என்னும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இந்த ஆண்டு இந்தப் பிரிவில் மொத்தம் 26 படங்கள் திரையிடப் பட உள்ளன.
இதில் 9 மராத்தி, 6 இந்தி, 2 தெலுங்கு மற்றும் உள்ள மொழிகளில் பாக்கிப் படங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. தமிழில் இருந்து ஒரே ஒரு படம் மட்டும் தேர்வாகி உள்ளது.
இதே போல கன்னடம், கொங்கணி, அசாமி, மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளில் இருந்தும் ஒரே படம் மட்டும் தேர்வாகி உள்ளது. பிரதான திரைப்பட வரிசையில் பாகுபலி 2 தெலுங்குப் படம் தேர்வாகி உள்ளது.
இந்த விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் அம்ஷன் குமார் இயக்கத்தில் உருவான மனுசங்கடா என்னும் திரைப்படம் ஆகும். அம்ஷன் குமார் இயக்கியுள்ள் ஆவணப் படங்கள் பல அவருக்கு புகழைத் தேடித் தந்துள்ளன. அவர் இயக்கியுள்ள இந்த மனுசங்கடா என்னும் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டுள்ளது.
சாதி பிரச்னையால் நிகழும் சீர்கேடுகளும், அதற்கு நியாயம் கிடைக்கிறதா என்பதையும் சொல்லும் ஒரு படம் மனுசங்கடா திரைப்படம். இந்த திரைப்படம் ஏற்கனவே மும்பை திரைப்பட விழாவில் திரையிட்ட போது பல ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றப்படம்.
மேலும், ஜேம்ஸ்பாண்ட் படங்கள், கனடா திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து திரையுலகை சேர்ந்தவர்கள் கோவுக்கு வந்துள்ளனர். இந்திய நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான், நடிகை கத்ரினா கைப் உள்பட இந்திய திரையுலக பிரபலங்களும் கோவாவில் முகாமிட்டுள்ளனர்.
இந்த விழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்திய திரைப்பட ஆளுமை விருது அளிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக கோவா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.