பண மதிப்பு நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படம் சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
உயர் பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
இந்த நடவடிக்கைகளால் மக்கள் பெரும் துயர் அடைந்ததை நினைவுகூரும் விதமாக இன்று கறுப்பு தினமாக எதிர்க்கட்சகள் கடைபிடிக்கின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கையில் பணம் இன்றி, வங்கி மற்றும் ஏ.டி.எம். வாசல்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றனர். அப்போது குர்கான் பகுதியில் ஏடிஎம் கியூவில் வரிசையை தவறவிட்ட ஒரு வயதான முதியவர், தனது இடத்தை தருமாறு அழுத காட்சியை ஆங்கில பத்திரிகையொன்று அப்போது படமாக வெளியிட்டது. அது மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல்.
மேலும், “அழுகை மிகவும் வலி தரக்கூடியது. அவரது கண்களின் ஓரத்தில் கடலோரம் தெரிவதை பார்க்கவில்லையா” என்கிற அர்த்தத்தில் வார்த்தைகளையும் பதித்துள்ளார்.
இந்த படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.