கொச்சி

ந்தியாவில் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட் கரன்சி நோட்டுக்கள் தென் ஆப்ரிக்கா தேர்தலுக்கு உதவுவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

பா ஜ க அரசினால் ரூ. 500 மற்றும் ஆயிரம் நோட்டுக்கள் செல்லாது என ஒரு வருடத்த்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.   அந்த நோட்டுக்களை வைத்திருந்தோர் வங்கிகளில் கொடுத்து செல்லும் நோட்டுக்களை வாங்கிச் சென்றனர்.   வங்கிகள் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டுக்களை ரிசர்வ் வங்கியிடம் அளித்தது.  அந்த நோட்டுக்களை எப்படி அழிப்பது என ரிசர்வ் வங்கி யோசனையில் ஆழ்ந்தது.

இதற்காக பல நிறுவனங்களிடம் ஆலோசனைகளை ரிசர்வ் வங்கி கேட்டது.   அதற்கு திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு கன்னூரில் அமைந்துள்ள வெஸ்டரின் இந்தியா பிளைவுட்ஸ் என்னும் நிறுவனம் அளித்த யோசனைப்படி அந்த நோட்டுக்கள்  உபயோகமாக அழிக்கப்பட்டுள்ளன.   அது குறித்து அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் பவா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பவா தனது பேட்டியில், “எங்களுக்கு திருவனந்தபுரத்தின் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுக்களை அழிப்பது குறித்து ஆலோசனை கேட்டது தெரிய வந்தது.  அவைகளை எரிப்பது சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதால் மாற்று வழிகளை எங்களிடமும் கேட்டது.  அதையொட்டி எங்கள் நிறுவனத்தின் ஆய்வுத் துறை பல வழிகளை யோசித்து வந்தது.  அதன் படு தறு மாறாக கிழிக்கப்பட்ட இந்த செல்லாத நோட்டுக்கள் கூழாக ஆக்கப்பட்டது.   பிறகு அந்தக் கூழை மரத்துடன் கலந்து ஹார்டு போர்டுகளாக மாற்றப்பட்டது.   அந்த போர்டுகள் தற்போது தென் ஆஃப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.   அங்கு இது தேர்தல் நேரமாததால் இந்த போர்டுகளை தேர்தல் விளம்பரத்துக்கு அவர்கள் உபயோகப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.