
சென்னை,
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் நாளை மாலை தமிழகம் வருகிறார். நாளை மறுதினம் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
தமிழக கவர்னராக இருந்த ரோசையாக ஓய்வுபெற்று ஓராண்டுக்கும் மேலாக, தமிழக கவர்னர் நியமிக்கப்படாமல், மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவை பொறுப்பு கவர்னராக ஜனாதிபதி நியமனம் செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் தமிழக கவர்னராக பன்வாரிலால் நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் நாளை பிற்பகல் சென்னை வருகிறார். நாளை மறுநாள் (6-ந்தேதி) கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் அவர் புதிய கவர்னராக பதவி ஏற்கிறார்.
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் ஏற்கிறார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர்ராவ் நாளை மும்பை புறப்பட்டு செல்கிறார்.
[youtube-feed feed=1]