ராம்பூர்,
உ.பி. மாநிலம் ராம்பூரில் போலீஸ் நிலைய தலைமையகத்தில் போதையில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் நிலையத்திற்கு வெளியே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை பிடித்து சென்று சப்-இன்ஸ்பெக்டர் தாஜ்வீர் சிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை நேரில் பார்த்த காவலர் எச்சரித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களை பெரும் ஆத்திரமடைந்து காவல் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்க முயற்சித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த உயர் அதிகாரி தாஜ்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ததோடு, அவரை கைது செய்ததால் மக்கள் சமாதானமடைந்தனர்.
Patrikai.com official YouTube Channel