லக்னோ
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் தாம் புதுக்கட்சி துவங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த முலாயம்சிங் யாதவ் (வயது 77) சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் உ.பி முதல்வராக பணி புரிந்து வந்தவர். தற்போது சமாஜ்வாதி கட்சியின் தலைவராக உள்ள அகிலேஷ் யாதவின் தந்தை. இவர் தனது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதுக்கட்சி துவங்கப் போவதாக செய்திகள் வந்தன.
சமீபத்தில் லக்னோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த முலாயம் சிங் யாதவ் தமக்கு தற்போதைக்கு புதுக் கட்சி துவங்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என கூறி உள்ளார்.
மேலும், அகிலேஷ் யாதவ் பற்றி கேட்டதற்கு, “அவருக்கு மகன் என்னும் முறையில் என் ஆசிகள் என்றும் உண்டு. ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.