டில்லி
நாளை மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவராக ராஜிவ் மஹரிஷி நாளை பதவி ஏற்கிறார்.
மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அரசுத் துறையின் அனைத்துக் கணக்கு வழக்குகளையும் கவனித்து வருகிறது. அந்தத் துறையின் தணிக்கை அறிக்கைகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் முன் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்தத் துறையின் தலைவராக பதவி வகித்து வந்த சசிகாந்த் சர்மா கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலகினார்.
அதனால் ராஜஸ்தானை சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி ராஜிவ் மஹரிஷி நாளை மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவராக பதவி ஏற்கிறார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை ராஷ்டிரபதி பவனில் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.