ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் வார்னரின் குழந்தைகள் படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி சென்னையிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவிலும் நடைபெற்றது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற முன்னிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர், இன்ஸ்டிராகிராம் தளத்தில் பதிவேற்றிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் குறித்து வார்னர் தெரிவித்துள்ளதாவது:
“என்னுடன் என் குழந்தைகளும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் சென்னையை மிகவும் ரசித்தார்கள். அதுமட்டுமின்றி அடம் பிடித்து காரை நிறுத்தச் சொல்லி, எலுமிச்சை ஜூஸ் வாங்கிக் குடித்தனர்” எந்று வார்னர் பதிவிட்டுள்ளார்.