நியூயார்க்
ஒரு வகை ஆண்டிபயாடிக் செலுத்துவதன் மூலம் எச் ஐ வி எனப்படும் எய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மனித உடலில் எச் ஐ வி வைரஸ் புகுந்ததும் அதை தடுக்க உடலில் ஏற்கனவே உள்ள சில செல்கள் முயலுகின்றன. ஆனால் எச் ஐ வி வைரஸ் அந்த செல்களில் முயற்சியை முறியடித்து பின் உடலுக்குள் பரவி விடுகின்றன. அதே நேரத்தில் ஒரு சிலருக்கு மட்டும் இந்த செல்கள் நாளடைவில் வலுவாகி எச் ஐ வி வைரஸ்களின் தாக்கத்தை குறைக்கின்றன. காலப் போக்கில் எச் ஐ வி இருந்த தடமே மறைந்து விடுகின்றன. இந்த உண்மையை மையமாகக் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சுகாதார அமைப்பும் சனோஃபி பாராமெடிகல் நிறுவனமும் இணைந்து ஒரு ஆராய்ச்சி நடத்தியது.
அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரு புதிய வகை மனித உடல் செல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செல் எச் ஐ வி வைரஸை எதிர்த்து தாக்கும் வலிமை உள்ளது. இன்த செல்கள் மனித உடலில் இயற்கையாக உண்டாக்க ஒரு மருந்தும் கண்டுபிடித்துள்ளது.
இதுவரை மனிதனைத் தவிர மற்ற பல உயிரினங்களுக்கு இந்த செல்கள் செலுத்தியும், அதை வலுவாக்கும் மருந்துகளை அளித்தும் பரிசோதனை செய்யப் பட்டுள்ளன. இந்த பரிசோதனைகளில் ஆரம்ப கட்டத்தில் இருந்தே எச் ஐ வி வைரஸ்கள் செல்களால் கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
இந்த ஆராய்ச்சியின் முழு அறிக்கையையும், முடிவையும் ஆய்ந்த மருத்துவ நிபுணர்கள் இந்த ஆராய்ச்சி மனித குலத்துக்கு நல்லதொரு உதவியை வழங்க வல்லது என தெரிவித்துள்ளனர். எய்ட்ஸ் நோயை இயற்கையான முறையில் விரைவில் குணப்படுத்த முடியும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளனர். உடனடியாக இது மனித உடலில் செலுத்தப்பட்டு பரிசோதனை செய்ய வேண்டும் என இந்த ஆராய்ச்சியை செய்த மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தப் புதிய அணுகுமுறையின் மூலம் செல்களில் சில மாறுதல்களும் சில செல்களை ஒன்றிணைத்து அவைகளை வளரச் செய்வதன் மூலமும் விரைவில் எச் ஐ வி க்கு முடிவு கட்டப்படும் எனவும் அதற்கான ஆண்டிபயாட்டிக் உடலில் செலுத்தப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.