சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். சென்னையில் உள்ள அவரது வீடுகள் மற்றும் இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவரது பதவி காலத்தில் சில தனியார் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்தே தற்போது ஜெயந்தி நடராஜன் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘‘நாட்டில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்றால் ‘ஜெயந்தி வரி’ செலுத்த வேண்டியுள்ளது’’ என கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.