நாக்பூர்

காராஷ்டிரா மாநில பா ஜ க பாராளுமன்ற உறுப்பினர் நானா படோல் பிரதமர் மோடி கேள்விகள் எழுப்பப்பட்டாலே எரிச்சலாகி விடுவார் என தெரிவித்துள்ளார்.

நாக்பூரில்  சமீபத்தில் விவசாயிகள் துயர் குறித்து ஒரு கருத்துரங்கு நடைபெற்றது.   அதில் மகாராஷ்டிரா பா ஜ க பாராளுமன்ற உறுப்பினர் நானா படோல் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் தெரிவித்ததாவது :

“பா ஜ க பாராளுமன்ற கூட்டங்களில் மோடி தவறாமல் கலந்துக் கொள்வது வழக்கம்.   ஆனால் யாராவது ஏதாவது கேள்விகள் எழுப்பினால் கோபமடைந்து எரிச்சலாகி விடுவார்.  நான் பலமுறை இதை நேரடியாக பார்த்துள்ளேன்.  ஒருமுறை எனக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.   நான் பசுமை வரி, ஓபிசி அமைச்சகம்,          விவசாய முதலீடு அதிகரிப்பு ஆகியவைகளை பற்றி எனது ஆலோசனைகளை சொன்னேன்.  உடனே மோடி எரிச்சல் அடைந்தார்.   என்னிடம் கோபப்பட்டு என்னை எதுவும் பேச வேண்டாம் என கண்டித்தார்.

மகாராஷ்டிரா முதல்வரால் மாநிலத்துக்கு தேவையான நிதி உதவிகளை பிரதமரிடம் இருந்து கேட்டுப் பெற முடியவில்லை.  நமது மாநிலத்தில் இருந்து அதிகபட்ச நிதி மத்திய அரசுக்கு செல்கிறது.  ஆனால் அந்த அளவுக்கு நிதி உதவி நம் மாநிலத்துக்கு வழங்கப்படுவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் முதல்வர் பிரதமரை சந்திக்கவே பயப்படுகிறார்.  முதல்வர் மட்டும் அல்ல அனைத்து மத்திய அமைச்சர்களுமே பிரதமரிடம் ஒரு பயத்தில் உள்ளனர்.   நான் மந்திரியாக விரும்பவில்லை.   நான் பிரதமரின் ஹிட் லிஸ்டில் இருந்தும் அதற்காக பயப்படவில்லை.” எனக் கூறி உள்ளார்.