காந்திநகர்,

ந்தியாவின் முதல் ‘உலக பாரம்பரிய நகரம்’ அந்தஸ்து குஜராத்தின் அகமதாபாத் நகரத்துக்கு கிடைத்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு இதை அறிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கி உள்ளது.

இந்த புகழைப்பெறும் முதல் இந்திய நகரம் என்ற பெருமையும் அகமதாபாத் நகரம் பெற்றுள்ளது.

 

பாரம்பரிய சின்னங்கள் அதிக அளவில் உள்ள குஜராத் மாநிலத்தில், சபர்மதி ஆசிரமம், அகமதாபாத் ரெயில் நிலையம், 1573ல் கட்டப்பட்ட சிதி சையத் மசூதி, 1424ல் கட்டப்பட்ட ஜாமா மசூதி என பல  அடையாளங்கள்  உள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), குஜராத்தின் அகமதாபாத் நகரை  ‘உலக பாரம்பரிய நகரம்’ என ஜூலை மாதம் போலாந்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது அறிவித்தது.

அதைத்தொடர்ந்து யுனெஸ்கோ அமைப்பின் செயலாளர் இரினா பொகோவா, குஜராத் முதல்வர்  விஜய் ரூபானியிடம் அதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதுகுறித்து பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசுகையில், ”இது குஜராத் மக்கள் பெருமை அடைய வேண்டிய தருணம். இது முன்னதாகவே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இவ்வளவு தாமதமாக கிடைத்ததற்கு முன்னர் ஆட்சி செய்தவர்களின் தவறுகளே காரணம் என கூறினார்.