சென்னை:

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டு மருத்துவக் கல்வியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்டர் கனவோடு படித்த பிளஸ் 2 மாணவ மாணவிகள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வகையில் தான் அனிதா தற்போது தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு மன நல ஆலோனை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாணவர்கள் 104 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு மன நல ஆலோசனை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனால் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன உளைச்சலிலும், குழப்பத்திலும் விபரீத முடிவுகளை எடுக்காமல் இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.