சென்னை:
அனிதாவின் மரணத்தால் மிகவும் வேதனை அடைந்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,‘‘அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. அனிதாவிற்கு நிகழ்ந்தது துரதிருஷ்டவசமானது. இந்த முடிவு அனிதாவின் உச்சகட்ட மனவேதனையை காட்டுகிறது. அனிதாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்’’ என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]