சென்னை,

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர் கமல் என்று அமைச்சர் உதயகுமார் அதிரடியாக குற்றம் சாட்டினார்.

இன்று செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர்  உதயகுமார் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் கமலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

கமலின் டுவிட் குறித்து அமைச்சர் உதயகுமார் கமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், சென்னை கலைவானர் அரங்கத்தில் நாளை நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும்,

ஓ.பி.எஸ் அணியுடன் இணைப்பு பேச்சுவார்த்தை சாதகமாக நடைபெற்று வருகிறது என்றும், இரு அணி இணைப்பு தொடர்பாக ஆவணியில் தேதி குறிக்கப்பட்டு; இணைப்பு விழா பிரம்மாண்டமாய் நடத்தப்படும் என்றும் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்து வருகிறார் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.

ஜெயலலிதா இல்லாத நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களில் நடிகர் கமலும் ஒருவர் என அவர் சாடியுள்ளார்.