பீஜிங்

சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்படும் கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு துண்டுகளாக உடையக்கூடும் என பரவலாக பேசப்படுகிறது.

சீனாவை சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் தற்போதைய சீனாவின் அரசியல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.   அளும் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள கோஷ்டி மோதல் மேலும் மேலும் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி,  இதே நிலை நீடித்தால் விரைவில் சீனா ஏழு துண்டுகளாக உடையக் கூடும் எனவும் அஞ்சுகின்றனர்.

இது குறித்து சீனாவில் பேசப்படுவதாவது :

”சீனா பிளவு படப்போவது உறுதியாகத் தெரிகிறது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையில் கோஷ்டி மோதல் இல்லை என சொல்லுவது வெறும் பேச்சுதானே தவிர உண்மையில்லை.   இந்த கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.  அரசியல் ஆதாயங்களுக்காக, ஜியாங்க் ஜெமின், மற்றும் ஹூ ஜெண்டோ அணி கடுமையாக ஜி ஜின்பிங் அணியுடன் கடுமையாக மோதலில் ஈடுபட்டு வருகிறது.   இதன் காரணமாக இவர்களிடம் இருந்து மேலும் சில கோஷ்டிகள் பிளவு பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கிடையே அமைதியின்மை நிலவுகிறது,  இது விரைவில் மற்றொரு சுதந்திர போராட்டமாக வெடிக்கக்கூடும்.    மனித உரிமை ஆர்வலர்களும், சட்ட அறிஞர்களும் இருக்குமிடம் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளனர்.   மீடியாவின் மீது அரசு கொண்டு வந்துள்ள கடும் கட்டுப்பாட்டினால், செய்திகள் வெளியே வராமல் உள்ளது.    ஆனாலும் ஒரு சிலர் ரகசியமாக நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பாக அதிபர் ஜி ஜின்பெங் கு எதிராக நடக்கும் உட்கட்சி பூசலை வெளிக் கொண்டு வருகிறார்கள்.

நிச்சயமாக விரைவில் ஒரு புரட்சி வெடிக்கப் போகிறது.  அதன் பின் ஸின்ஜியாங், ஹாங்காங், திபெத், செங்டூ, ஸான்சுங், மன்சூரியா, ஷங்காய் என ஏழு தனி நாடுகளாக சீனா பிளவு படும்.   டோக்லாம், மற்றும் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனை ஆகியவைகள் மூலமாக அமெரிக்க உதவியை பெறவும், உள்நாட்டுக் கலவரங்களை திசை திருப்பவும் ஆளும் கம்யூனிஸ்ட் முயற்சி செய்து வருகிறது.

உள்நாட்டுக் கலவரங்களை திசை திருப்பும் மற்றொரு முயற்சியே இந்திய எதிர்ப்பு.   இதையும் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு நடத்தி வருகிறது.   ஆனால் எவ்வளவு திசை திருப்பினாலும் இன்னும் ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளில் மற்றொரு புரட்சி வெடிக்கும்.    மீடியாக்களின் மீது அரசு கொண்டுவந்துள்ள தடைகளையும் மீறி சமூக ஆர்வலர்கள் தங்களின் செய்திகளையும் அரசுக்கு எதிரான பரப்புரையையும் மக்களுக்கு எடுத்து சென்ற வண்ணம் உள்ளனர்.  தற்போதைய ஜின்பிங் அரசுக்கு கட்சியிடமும்,  மக்களிடமும் கடும் எதிர்ப்பு உள்ளது.  அது வெடிக்கும் நாள் எப்போது என்பது தான் தெரியவில்லை”

என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.