ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் நடந்த இலங்கையுடனான 2வது டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 70 ரன்களை எடுத்து இருந்தார். 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஜடேஜா 438 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். ஷாகிப் அல் ஹசன் 431 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். பந்து வீசாளர் வரிசையில் 842 புள்ளிகள் பெற்று அஸ்வின் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
முதல் இடத்திற்கு ரவீந்தர ஜடேஜா வந்தார். முகமது ஷமி 20வது இடத்திலும் உமேஷ் யாதவ் 22வது இடத்திலும் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel