டோக்கியோ:

‘‘அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும்’’ என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு 2வது உலகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிம்மா நகரில் 600 மீட்டர் உயரத்தில் அமெரிக்கா வீசிய அணு குண்டால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர்.

ஹிரோஷிம்மாவில் அணு குண்டு வீசப்பட்ட 72வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஹிரோஷிம்மா அருகில் உள்ள அமைதி பூங்காவில் நடந்தது. இதில் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஐரோப்பா யுனியன் உள்பட 80 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஷின்சோ அபி பேசுகையில், ‘‘அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும். இதற்கு ஏற்ப தற்போது பெருக்கெடுத்துள்ள அணு எதிர்ப்பு ஒப்பந்தகள் வலுவடைய செய்ய வேண்டும். உலக அமைதிக்காக ஜப்பான் அதிகப்படியான சிரத்தையை எடுத்துக் கொள்ளும்’’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில்,‘‘ இந்த நிகழ்வு கடந்த காலம் என்று நினைக்க வேண்டாம். நீண்ட நாட்களாக அணு ஆயுதங்கள் பரவலாக உள்ளது. கொள்கை வடிமைவப்பாளர்கள் இதை மிரட்டலுக்காக பயன்படுத்துகின்றனர். எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தான் நிலவுகிறது.

தற்போதை சூழலில் ஒரு அணுகுண்டு வீசினால் ஹிரோஷிம்மா மற்றும் 3 நாட்கள் கழித்து மற்றொரு அணு குண்டு வீச்சுக்கு ஆளான நாகசாகி ஆகிய நகரங்களில் ஏற்பட்ட அழிவை விட அதிகளவில் இருக்கும். அணுகுண்டால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு ஜப்பான் மட்டுமே. 1945ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலோடு, இனிமேல் இது போன்ற தாக்குதல் இருக்க கூடாது என்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

நாட்டின் அரசியலமைப்பின் படி நிலம், கடல் மற்றும் விமானப் படைகள் மட்டுமே உள்ளது. இதர போர் யுக்திகள் எதையும் பராமரிக்கவில்லை. அமெரிக்காவுடன் அணு தடுப்பு தொடர்பான உறவுகளை மட்டுமே ஜப்பான் கொண்டுள்ளது. முதன் முதலாக அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா கடந்த ஆண்டு ஹிரோஷிம்மா நகருக்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஐநா.வில் அணு ஆயுத எதிர்ப்பு தீர்மானம் நிறைவேறியத வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்நிலையில் தற்போது வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டல் உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் வடகொரியா ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணையை வெற்றி கரமாக சோதனை செய்தது. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ நகரங்களை குறிவைத்து அணு ஆயுதம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.