சென்னை,

த்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள  லுக் அவுட் (தேடப்படும்) சுற்றரிக்கையை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை  உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது  ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில்   கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ90 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம்  வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, தேடப்படும் நபர் மீது ‘அவுட்லுக்’ சுற்றறிக்கையை மத்திய உள்துறை அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக அவர் வெளிநாடுகளுக்கு விமானம் மூலமோ, கடற்பயணம் மூலமோ தப்பிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சகம் தன்னைப் பற்றி வெளியிட்டுள்ள லுக் அவுட் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.