கோப்பு படம்

திருமுருகன் காந்தி, வளர்மதியைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சீமான் கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

’தமிழ்தேசிய இனமக்கள் சந்திக்கும்  சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் மத்திய – மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசியதாகவும், இரண்டு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாகவும், சீமான் மீது  124ஏ, 153ஏ, 153பி, 505 ஆகிய பிரிவுகளின் கீழ்  காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

திருமுருகன் காந்தி, வளர்மதி ஆகியோர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சீமான் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாலும், ஏற்கெனவே சீமான் மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளதாலும் அவரையும் குண்டாசில் கைது செய்ய  காவல்துறை திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி  அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.