தேனி:
தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான பிரச்சினைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என்று ஒபிஎஸ் அறிவித்துள்ளதாக கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், ஓபிஎஸ் சொன்னபடி கிணறை மக்களுக்கு வழங்காமல் அல்வா கொடுத்துள்ளார். கிணறை பொதுமக்களுக்கு விற்பதாக கூறிவந்தவர், திடீரென தனது நண்பர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒபிஎஸ்சின் இந்த ஏமாற்றும் செயல் காரணமாக அந்த பகுதி மக்கள் மேலும் கொதிப்படைந்து உள்ளனர்.
தேனி மாவட்டம் லெட்சுமிபுரம் அருகே கோம்பை அடி வாரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மற்றும் ஓபிஎஸ்ஸின் நண்பர் சுப்புராஜ் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில் 200 அடி ஆழ கிணறு உள்ளது. இதன் அருகில் லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் பொதுக் கிணறும் இருக்கிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் கிணற்றை ஆழப்படுத்தியதால், ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டதாக கூறி, கிணறை மூட வேண்டும்அப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டி போராடி வருகின்றனர்.
அதையடுத்து , இருதரப் பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில் பேச்சுவார்த்தையின்போது, பொதுமக்களுக்காக தனது கிணற்றை இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பினர், பிரச்சினைக்குரிய அந்த கிணறு மற்றும் அருகில் இருந்து நிலத்தை, தனது நண்பர் சுப்புராஜ் என்பவருக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளதாகவும், இதை நாங்கள் சும்மா விட மாட்டோம் என்றும் அப்பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.