டில்லி,

திமுகவின் இரு அணியினரும் டில்லியில் முகாமிட்டு பிரதமரை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறையில் உள்ள சசிகலாமீதான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இரு அணியினரையும் மோடி சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசு மறைமுகமாக தனது அதிகாரித்தை செலுத்தி வருகிறது. தமிழக அரசின் கைலாயாகததனத்தால்,   பல்வேறு மக்கள்விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் கடலூர் பகுதியில் பெட்ரோலிய  மண்டலம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே  நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், தற்போதைய பெட்ரோலிய மண்டல அறிவிப்புக்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றோரின் அரசுக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து,  மக்களை சந்திக்க மோடி அரசு விரும்புவதாக கூறப்படுகிறது.

இரு அணி தலைவர்கள் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருப்பதால், அதை வைத்து, அவர்களை மிரட்டி, தமிழகத்தில் பாரதியஜனதா வலுவாக காலூன்ற, தமிழக அரசை பகடைக்காயாக மாற்றி வருகிறது.

அதேபோல் சசிகலா விவகாரத்தில் தொடர்ந்து வரும் பிரச்சினை காரணமாக விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகவே இன்று முற்பகல், டில்லியில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ், கே.பி முனுசாமி , டாக்டர் மைத்ரேயன் , செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நீட் விலக்கு குறித்து பேச,  டில்லி சென்றுள்ள தமிழக  முக்கிய அமைச்சர்களும் இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்திக்கிறார்கள்.

இதன் காரணமாக அதிமுகவில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.