பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா,டிஜிபி சத்ய நாராயணாவுக்கு ரூ.2கோடி பணம் கொடுத்து சகல வசதிகளும் பெற்று சொகுசாக இருப்பதாக அதிரடி புகார் கூறிய சிறைத்துறை டிஐஜி ரூபா உள்பட, பெங்களூரூ முக்கிய போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை உட்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது பற்றி டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் டிஐஜி ரூபா.
அதில், சசிகலாவிடம் டிஜிபி சத்யநாராயண ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு புகார் கூறினார்.
அதையடுத்து டிஜிபி சத்யநாராயணா ரூபா கூறுவது பொய் என்று மறுத்து வந்தார். இது குறித்து கர்நாடக முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவர் இதுகுறித்து உயர்மட்டக் குழு விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சிறைத்துரை பற்றி புகார் கூறிய டிஐஜி ரூபா அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டடார்.
மேலும், பெங்களூரு போலீஸ் உயர் அதிகாரிகளை கூண்டோடு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.
புலனாய்வுத்துறை டிஜிபியோக பணியாற்றிய வந்த எம்.என்.ரெட்டி ஐபிஎஸ் ஊழல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி என்.எஸ்.மெகரிக் ஐபிஎஸ், சிறைத்துறை ஏடிஜிபியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், டிராபிக் ஏடிஜிபி ஏஎஸ்என் மூர்த்தி ஐபிஎஸ், வனத்துறை ஏடிஜிபியாகவும் மாற்றப்பட்டுள்ளார்.
புலனாய்வுத்துறை ஐ.ஜி. அம்ரித் பால் ஐபிஎஸ்.க்கு கூடுதலாக பெங்களூர் விஜிலன்ஸ் டிஜிபி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சசிலாகக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி சிறைத்துரை டிஜிபி ரூபா, டிராடிபிக் துறையின் துணை டிஜிபியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் டிஜிபி சத்யநாராயணவும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
டிஜிபி ரூபா இதுவரை 30 தடவை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது 31வது முறையாக டிராபிக் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.