ண்டிகர்

கவல் அறியும் சட்டத்தின் கீழ் அரியானா முதல்வரின் பட்டப்படிப்பு பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டன.  அதற்கு ஹரியானா சட்டசபை, முதல்வரின் அலுவலகம் மற்றும் எங்கும் விடையளிக்கப் படவில்லை

அரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் தனது வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதி பட்டப்படிப்பு, எனவும் டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  வேறு எந்த விவரமும் தாவில்லை.

வழக்கறிஞர் ஹேமந்த் குமார் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், ”முதல்வர் வாங்கிய பட்டம் எது ?  அதாவது, பி.ஏ.,  பி. எஸ்சி,, பி.காம்.  ஆகியவற்றில் எது? எந்த வருடம் படிப்பை முடித்தார்,? அவர் படித்த கல்லூரி எது?  டில்லி பல்கலைக்கழகத்தில் எந்த டிபார்ட்மெண்டில் அவர் படித்தார்?  அவர் ஒவ்வொரு வருடமும் அல்லது கடைசி வருடமாவது பெற்ற மதிப்பெண்களின் விவரம் என்ன?”  போன்ற தகவல்களை கேட்டிருந்தார்.

அந்த மனு, முதலில் அரியானா சட்டசபைக்கு அனுப்பப் பட்டது.  அங்கு அந்த விவரங்கள் இல்லை என திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.  பின்பு அந்த விவரங்களைக் கேட்டு முதல்வர் அலுவலகத்துக்கு அந்த மனு அனுப்பப்பட்டு, அங்கும் விவரங்கள் இல்லை என்னும் பதிலுடன் திரும்பி வந்துள்ளது.   இந்த தகவல் ஹேமந்த் குமாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அப்பீல் செய்ய ஹேமந்த் குமாருக்கு ஒரு மாத அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக அரியானாவின் சபாநாயகர் கன்வர் பால் பற்றி அசெம்பிளி வெப்சைட்டில் அவர் கல்வித்தகவலில் பி. ஏ என குறிப்பிடப்பட்டத்.  அதன் விவரங்களை பற்றி ஹேமந்த் கேள்வி எழுப்பினார்.  அவருடைய கேள்விக்குப் பின் அவரது கல்வித்தகவலில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிப்பை நிறுத்திக் கொண்டார் என திருத்தப்பட்டது.