டுப்பி

ஸ்லாமியர்களுக்கு உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் விருந்தளித்ததை எதிர்க்கும் ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் மசூதியில் இந்துக்கள் அனுமன் சாலிசா மந்திரத்தை ஜெபிக்க முடியுமா என வினா எழுப்பியுள்ளார்.

உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் சமீபத்தில் இஃப்தார் விருந்து அளித்த ஸ்ரீவிஷ்வேஷ்வர தீர்த்தா சுவாமியை பிரமோத் முத்தலிக் எதிர்த்து வருவது தெரிந்ததே.

இப்போது இந்து மகா சபையின் தலைவர் தர்மேந்திரா ஒரு அறிக்கையை பிரமோத் முத்தலிக் ஆதரவுக்காக வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் கூறப்படுவதாவது :

உடுப்பி மடத்தில் இஃப்தார் விருந்து நடந்த போது

”உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் அனைத்து ஹிந்துக்களுக்கும் சொந்தமானது.  அது விஷ்வேஸ்வரா தீர்த்தா சுவாமியின் சொந்தச் சொத்து அல்ல.  அவர் இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவிக்க இஃப்தார் விருந்து அளித்தது அவருடைய சொந்த விஷயம்,  அதை மடத்தின் கோவிலில் அளித்தது தவறு.  அது மட்டுமின்றி மடத்தின் நிலம் ஹாஜி அப்துல்லா என்பவர் அளித்ததாக சுவாமிஜி உளறுகிறார்.   இது இந்துக்களின் நாடு.  இஸ்லாமியர்கள் வந்தேறிகள்.  அவர்கள் யார் நமக்கு நிலம் அளிக்க?
மத நல்லிணக்கத்துக்காக இஃப்தார் விருந்து கோயிலில் அளிக்கப்பட்டதாக கூறுகிறீர்களே, இதே நல்லிணக்கத்தை உங்களால் மசூதிக்குள் அனுமன் சாலிசா மந்திரத்தை ஜெபித்து நிருபிக்க முடியுமா?” என அந்த அறிக்கையில் கேட்டுள்ளார்.

இது பற்றி ஸ்ரீராம் சேனாவின் செயலாளர் பிரவின் வால்கே கூறுகையில்:

இதில் மதநல்லிணக்கம் இல்லை.  மாறாக அரசியல் தான் இருக்கிறது.  நான்கு வருடங்கள் முன்பு ஒரு கோவிலில் ஜனார்த்தன் பூஜாரி ஒரு கோவிலில் இஃப்தார் விருந்து அளித்ததை பா ஜ க கடுமையாக எதிர்த்தது  ஆனால் இப்போது அதே பா ஜ க சுவாமிக்கு ஆதரவு தெரிவிக்கிறது.  கடந்த 30-49 வருடங்களாக சுவாமிஜி எத்தனை இஃப்தார் விருந்து அளித்தார்?  இப்போது திடீரென இஸ்லாமியர் மீது அன்பும், பாசமும் ஏற்படக் காரணம் என்ன?  இதன் பின்னால் அரசியல் விளையாடுவதை குழந்தைகளும் புரிந்துக்கொள்ளும்“  என கூறியுள்ளார்.

கிருஷ்ணர் கோவிலில் இஃப்தார் நடந்ததை கண்டிக்கும் விதமாக பங்களூரு லால்பாக் சர்க்கிளில் ஜூலை மாதம் 2ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை போராட்டம் நடைபெறும் என ஸ்ரீராம் சேனா அறிவித்துள்ளது.