டுப்பி

விஷ்வேசதீர்த்த சுவாமி, உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இஃப்தார் விருந்து அளித்ததற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன

சமீபத்தில், உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இஃப்தார் விருந்து கொடுத்ததற்கு விஷ்வேச தீர்த்த சுவாமிக்கு பலரும் தங்களின் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.   ஆனால் அதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்க்கவும் செய்கின்றன.

அந்த இந்து அமைப்புகளில் ஒன்றான ஸ்ரீ ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உடுப்பி மடாதிபதியுடன் பிரமோத் சந்தித்து தனது கண்டனத்தை பற்றி விவாதித்தும் உள்ளார்.   ஆனால் மடாதிபதி இவருடைய கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை.  தான் செய்ததில் தவறில்லை எனக் கூறி விட்டார்

அவர், “இந்து மதம் பசுவை தெய்வமாக வணங்குகிறது.   ஆனால் அந்த பசுவை வெட்டி தின்னும் மத்த்தினருக்கு விருந்து கொடுக்கலாமா?  அப்படி செய்ததின் மூலம் உடுப்பியில் மடாதிபதி இந்துக்களை அவமானம் செய்து விட்டார்.    இது மடத்துக்கோ அல்லது மடாதிபதிக்கோ ஏற்ற செயல் அல்ல.   இந்த நிகழ்ச்சிக்கு அவர் மன்னிப்பு கேட்பதோடு,  இனி இது போன்ற அவமதிப்பை நிகழ்த்த மாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும்.   எந்த மசூதியிலாவது யுகாதி விழா கொண்டாடப் பட்டுள்ளதா?” என அறிக்கை வெளியுட்டுள்ளார்.

இதற்கு மடாதிபதி, “ நான் பசுவதையை எதிர்ப்பவன்.   இஸ்லாமிய மக்களிடம், பசுவைக் கொல்ல வேண்டாம் என வலியுறுத்தத் தயாராக உள்ளேன்.  இஸ்லாமியர்களில் பலரும் இன்றுவரை எனக்கும் மற்றும் பல இந்துக்களுக்கும் உதவி செய்தவண்ணமே உள்ளனர்.    பல மசூதிகளின் திறப்பு விழாவுக்கு என்னை அழைத்தது அவர்களின் மதச்சார்பின்மையக் காட்டுகிறது.   அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப் பட்ட விருந்தை குறை கூற வேண்டாம்.   ஒற்றுமைக்காக பாடுபடும் இந்துக்களின் நடுவே, ஒரு சிலர் இவ்வாறு வேற்றுமையை வளர்க்கும் விதத்தில் செயல் படுவது வருந்தத் தக்கது.  ” எனக் கூறியுள்ளார்.

இவ்விரு அறிக்கைகளும் உடுப்பி மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.