
சென்னை,
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதையடுத்து புதிய நீதிபதிகள் 6 பேரும் நாளை காலை பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதிய நீதிபதிளாக அப்துல் குத்தூசி, ஆதிகேசவலு, சுவாமிநாதன், தண்டபானி, பவானி சுப்பராயன், ஜெகதீஷ் சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்.
சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 48 நீதிபதி கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்போது நியமிக்கப்படும் புதிய நீதிபதிகளை சேர்த்து சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், மேலும் 21 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]