வாணியம்பாடி,
தமிழக காங்கிரஸ் சிறுபாண்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷாவிற்கு கொலைமிரட்டல் விடுத்து தாக்க முயற்சி நடந்தது வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாட்டிறைச்சி குறித்து தமிழக அமைச்சர் நிலோபர் கபிலின் நிலை என்று என்று செய்தியாளர் சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் சிறுபாண்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து, அமைச்சர் நிலோபரின் ஆதரவாளர் ஒருவர் அஸ்லாம் பாஷாவிற்கு மிரட்டல் விடுத்து தொலைபேசியில் பேசினார்.
இந்த மிரட்டல் குறித்து அஸ்லம்பாஷா புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும்போது காரை வழிமறித்து அவரை தாக்க முயற்சி நடைபெற்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து வாணியம்பாடி காவல்துறை துனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஸ்லாம் பாஷா புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, நேற்று இரவுஅவருடைய வீட்டின் முன்பக்கம் வைத்திருந்த பெயா் பலகையும அடித்து உடைத்தும், அவரது வீட்டு முன் வைக்கப்பட்டிருந்து ரம்ஜான் வாழ்த்து பேனரையும் யாரோ மர்ம நபர்கள் கிழித்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.