
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் நோயாளிகள் அவசர தேவைக்காக அரசு ஆம்புலன்சுகளை உபயோகப்படுத்த ஆதார் கார்டு தேவை என்று உ.பி.மாநில அரசு அறிவித்து உள்ளது.
உ.பி.யில் பாரதியஜனதாவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றபின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பதவியேற்ற முதல் நாளில் அலகாபாத் மாநிலம் ராம்பாக் மற்றும் அட்லா பகுதிகளில் இயங்கிவரும் இரண்டு இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவிட்டார்.
அதையடுத்து, மாநிலத்தில் பசு கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கூடங்களை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து அரசு அலுவலங்களிலும் பான் மசாலா, குட்கா போன்ற புகைப்பொருட்கள் விற்க தடை விதித்துள்ளார். மீறி விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பின்னர், ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என்று கூறினார்.
அதே வகையில் தற்போது, நோயாளிகள் ஆம்புலன்சில் செல்ல வேண்டுமானால் ஆதார் எண்ணை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
ஆம்புலன்சு டிரைவர்கள் போலியான ஆவனங்கள் காட்டி முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்க, நோயாளி அல்லது நோயாளிகளின் உறவினர்களின் ஆதார் எண் பதியப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]