கொச்சி,
கேரளாவில் முதல் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருடன் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு உள்பட பலர் பங்கேற்றனர்.
கேரளாவில் முதன்முதலாக 13 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
கொச்சியை அடுத்த ஆலுவா முதல் பேட்டா வரையிலான சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக 5 ஆயிரத்து 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு விட்டதால், இன்று முதல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதற்கான விழா கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் இன்று காலை நடந்தது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.