சென்னை,

மிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியோ, முட்டையோ விற்பனை செய்யப்படவில்லை என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் பிளாஸ்டிக் அரிசி அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து ஆந்திர மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. இதையடுத்து பிளாஸ்டிக் அரிசியில் தயாரான பிரியாணி கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறேதோ என்ற பீதி மக்களிடையே எழுந்துள்ளது.

இதையடுத்து தமிழக உணவுத்துறை அமைச்சர் கோட்டையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி எங்கும் விற்பனை செய்யப்படவில்லை என்றும், அதுகுறித்து புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை என்ற பேச்சே இல்லை என்றம்,  அரிசி விலையும் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது என்றார்.

அதுபோல் தமிழகத்தில் பிளாஸ்டிக் முட்டை நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படும், அது குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் கூறினார்.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், மேலும் 1 கோடி ஸ்மார்ட் கார்டுகள் தயாராகி வருகிறது என்றும்,

பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.