
மும்பை,
மும்பை பகுதியில் பெற்ற தாயை கொலை செய்த கொடூர உள்ளம் கொண்ட மகன், தாயின் ரத்தத்தில் ஸ்மைலி பொம்மையை சுவரில் வரைந்துள்ளான்.
அந்த ஸ்மைலி பொம்மையுடன் முடிந்தால் எனை பிடி என்று சவாலும் விட்டுள்ளார். கொலைகார மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது,
சம்பவத்தன்று, பிரபலமான ஷீனா போரா கொலை வழக்கை முதலில் விசாரித்த காவல் ஆய்வாளர் தியானேஸ்வர் கனோர் மனைவி தீபாளி சான்டா குரூஸ் பகுதியில் உள்ள வீட்டில் ரத்து வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
சடலத்துக்கு அருகே, ரத்தத்தில் ஸ்மைலி பொம்மையை வரைந்து, “அவளால் சோர்ந்துவிட்டேன், முடிந்தால் பிடித்து, தூக்கில் போடு” என எழுதப்பட்டிருந்தது.
இரவு பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் தியானேஸ்வர், மனைவி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது மகனை தேடினார். அவர் எங்கிருக்கிறார் என்ற எந்தவித தகவலும் கிடைக்காததால், அவர், தனது மகனை யாரோ கடத்தியிருப்பார்களோ என்று சந்தேகித்து புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த கொடூர கொலையை செய்தது, போலீஸ் அதிகாரி தியானேஸ்வரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
படிப்பை பாதியிலேயே முறித்துக்கொண்டு ஊர் சுற்றி வந்த அவரது மகன் சித்தாந்தே என்றும், செலவுக்காக தனது தாயிடம் அடிக்கடி பணம் கேட்பதாகவும், சம்பவத்தன்று பணம் கொடுக்க தாய் மறுத்ததால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தலைமறைவான சிந்தாந்தேவை போலீசார் தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]