லக்னோ:

உ.பி. மாநிலத்தில் உள்ள 50 தலித்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களது சமுதாயத்தில் அதிகரித்துள்ள அடாவடித்தனம் காரணமாக இத்தகைய முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மொராதாபாத் பகுதியில் உள்ள இவர்கள் இந்து கடவுள்களின் சிலையை எடுத்துக் சென்று அங்குள்ள ஆற்றில் கரைத்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் பிரமுகர் ஒருவர் கூறுகையில், ‘‘ உயர் ஜாதியினரின் ஆதிக்கம் மற்றும் அழுத்தம் காரணமாக முடி திருத்துவோர் தங்களது பணிகளை மேற்கொள்ள மறுத்து வருகின்றனர்.

இதனால் நாங்கள் தாடி வளர்த்து முஸ்லிம் போல் காட்சியளிக்கிறோம். அதனால் நாங்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

இந்த தகவலை அறிந்த பஜ்ரங்தல் அமைப்பினர் சிலர் இந்த பகுதிக்கு விரைந்து வந்து தலித் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தலில் மக்கள் இதற்கு ஒத்துழைக்காமல் மதமாறும் முடிவில் இருந்து விலகப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் புதிய முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோரிடம் இருந்து நாங்கள் அதிகளவில் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் தலித் விரோத போக்கை கடைபிடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.