டெல்லி:

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மாதா அமிர்தானந்தமயிக்கு ஆசிரமம் உள்ளது. அண்மையில் உளவுத் துறை மத்திய அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆன்மிக தலைவர்களில் பாபா ராம்தேவுக்கு பிறகு இசட் பிரிவு பாதுகாப்பு மாதா அமிர்தானந்தமயிக்கு வழங்கப்படுகிறது.

அமிர்தானந்தமயிக்கு 24 மணி நேரமும் துணை ராணுவ வீரர்கள் 24 பேர் பாதுகாப்பு அளிப்பார்கள். இது தவிர அவருடைய ஆசிரமம் அமைந்திருக்கும் பகுதியை சுற்றி எந்த நேரமும் துணை ராணுவ வீரர்கள் 16 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த படையினர் நக்சலைட்டுகளை ஒடுக்கும் படைப் பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தம் 40 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாதா அமிர்தானந்தமயி செல்லும் இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவார்கள்.