விதர்பா,

காராஷ்டிராவில் பயிற்சி விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானிகள் பலியாகினர்.

தனியாருக்கு சொந்தமான பயிற்சி விமானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இன்று காலை 9.30 மணி அளவில் அந்த பயிற்சி விமானம் மகாராஷ்டிராவுகும், மத்திய பிரதேசத்திற்கும் இடையே பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென கீ விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்து வெயின் கங்கா நதி கரையோரம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் விமான பயிற்சி பெறும் குன்டா என்ற பயிற்சி விமானியும், அவருக்கு பயிற்சி கொடுத்து வரும்,, விமான பயிற்சியாளரான  ஹிமானியும் பலியானதாக வதேரா போலீசார் கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துவிரைந்து வந்து, விபத்தில் சிக்கிய விமானிகளை மீட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது,

தேசிய விமான பயிற்சி நிலையத்தில் இருந்து 22 கடல் மைல்கள் அல்லது 34 கி.மீ. தொலைவில் இந்த விமான விபத்து நடைபெற்றுள்ளது என்றும், இது அதானி பவர் நிறுவனத்தின் ஆலை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்தில் நொறுங்கிய விமான பாகங்கள் அருகிலிருந்த நதியில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.