டில்லி,

ராஜதந்திரி, சிறந்த அரசியல்வாதி என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அழைக்கப்படுகிறார்.

காங்கிரஸின் மூத்த தலைவராக விளங்கும் மன்மோகன்  நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் இணைந்தும் நெகிழ்ந்தும் போவதில் வல்லவராக உள்ளார்.

குறிப்பாக கடந்த 3 ஆண்டு மோடியின் ஆட்சியில் நெருக்கடியான மூன்று தருணங்களில் ஆலோசனை வழங்கி ஆறுதல் அளித்ததை நாம மறந்துவிட முடியாது.

அதேநேரம் அரசியல்வாதி என்ற முறையில் மோடி அரசின் கொள்கை முடிவுகளில் உடன்பாடு இல்லையென்றால் உடனே எதிர்ப்புத் தெரிவிப்பதிலும் மன்மோகன் முன்னணியில் இருக்கிறார்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய பாஜக அரசுக்கு ஆலோசனை வழங்கிய மூன்று முக்கியத் தருணங்கள் எவை.என்பதைக் காணலாம்.

1 சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா நிறைவேற  உதவியது.

2015 ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை.  இதனால் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் வீணாயிற்று. அப்போது மன்மோகன்சிங் வழங்கிய ஆலோசனைப்படி பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்து இப்பிரச்னையை சுமுகமாக முடிக்க ஆலோசித்தனர். மோடியின் வீட்டில் நடந்த இந்த முக்கிய ஆலோசனை சந்திப்புக்கு மன்மோகன் சிங் முக்கிய காரணமாக இருந்ததை ஊடகங்கள் பாராட்டின.

2 உரிஜித் படேலை பாதுகாத்தது.

உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை திடீரென எடுக்க காரணம் என்ன..என்பது குறித்து கடந்த ஜனவரிமாதம் ரிசர்வ் வங்கி ஆளுனர் விளக்கம் அளிக்கவேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திலிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள்  அமளியில் ஈடுபட்டனர்.

அந்த நிலையிலும் ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித்துக்கு மன்மோகன் ஆலோசனை வழங்கினார்.   நாடாளுமன்ற  நிலைக்குழு கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தால் ரிசர்வ் வங்கிக்கு சிக்கல் ஏற்படும். அதனால் பதில் சொல்லவேண்டாம் என ஆலோசனை மன்மோகன் தெரிவித்தார். மன்மோகன் சிங்  ரிசர்வ் வங்கியின்   முன்னாள்  ஆளுனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

3. மாநிலங்களவையில் ஜி எஸ் டி சட்டம் நிறைவேற்றம்

கடந்த வியாழக்கிழமை G S T சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதபடி மன்மோகன் பார்த்துக்கொண்டார்.