சென்னை:
தனது வீட்டில் வருமானவரி ரெய்டு நடத்தப்பட்டதற்கு அரசியல் உள்நோக்கமேகாரணம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்ததாவது:
“சென்னையில் எனது வீட்டில் மட்டுமின்றி எனது சொந்த ஊரிலும் வருமானவரி ரெய்டு நடந்தது. நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
இந்த சோனையின் போது பணம் எதுவும் சிக்கவில்லை
என் வீட்டிலும் நடிகர் சரத்குமார் வீட்டிலும் வருமானவரி சோதனை நடந்ததற்கு அரசியல் உள்ளோக்கமே காரணம்.
குறிப்பாக ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த நடந்த சதியே இது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார் விஜயபாஸ்கர்.