சென்னை:
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது.
இதை கேள்விப்பட்ட அவரது அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் வந்தார். அப்போது அவரை உள்ளேவிட பாதுகாலர்கள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், தனது மகளை பள்ளிக்கூட போக வருமான வரித்துறை யினர் அனுமதிக்கவில்லை என்றும், அத்துமீறி செயல்படுகின்றனர் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
அவரது வீட்டு முன் திரண்ட ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம் ஒழிக என்றும், டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர்.
பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூடுதலாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தளவாய்சுந்தரம் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் இருந்து ரூ.2.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரெய்டு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,
அவரது வீட்டுக்கு வெளியே நின்றிருந்த செய்தியாளர்களிடம், பாதுகாப்பு படையினர், வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர் என புகார் தெரிவித்தார்.
தம்முடைய வீட்டில் இருந்து எதையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்யவில்லை என்றும்,. தமது மகளை பள்ளிக்கு அனுப்ப கூட அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.