டில்லி,

கிரிக்கெட் வீரர் டோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது குறித்து, அவரது மனைவி சாக்ஷி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்துடன் டுவிட்டரில் காரசாரமாக விவாதம் நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஆதார் சேவை மையத்துக்கு பத்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டைகளை வழங்கும் ஆணையத்தின் (UIDAI) தலைமை நிர்வாக அதிகாரி, அந்த நிறுவனத்துக்கு பத்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளதாகவும், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது குறித்து,  அவரது மனைவி சாக்ஷி தோனி, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்துக்கு டுவிட் செய்து எதிர்ப்பு தெரிவித்தார்.

அத்துடன்,  தோனியின் ஆதார் அட்டையுடன், அவர் ஆதார் இயந்திரத்தில் விரல்களை வைத்திருக்குமாறு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு,

, “இனி என்ன அந்தரங்கம் இருக்கிறது? ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்களை பொதுச்சொத்தாக்கிவிட்டீர்கள். வருத்தமாக இருக்கிறது”. என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரவிஷங்கர் பிரசாத், “இல்லை, இது பொதுச்சொத்து இல்லை. என்னுடைய ட்விட்டர் செய்தியால் அந்தரங்க செய்தி எதுவும் வெளியாகிவிட்டதா?” என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதே தொனியில் சற்று நேரம் இருவரிடையே உரையாடல் நடைபெற்றது. இறுதியாக சாக்ஷி எழுதினார்,

“சார், நாங்கள் ஆதார் விண்ணப்பத்தில் கொடுத்திருந்த தகவல்கள் வெளியாகி விட்டது”.

மற்றொரு ட்வீட்டில் சாக்ஷி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சொன்னார்,

“சார் நான் @CSCegov ஹேண்டிலில் வெளியான இந்த ட்வீட்டின் இந்த புகைப்படம் குறித்து பேசுகிறேன்”.

அந்த புகைப்படம் பொது சேவை மையத்தின் ட்விட்டர் ஹேண்டில் @CSCegov-இல் இருந்து ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

அதில், ஆதார் அட்டைக்காக தோனி பூர்த்தி செய்திருந்த விண்ணப்பமும் பகிரப்பட்டிருந்தது. பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது.

@CSCegov இன் தவறை ஒப்புக் கொண்ட ரவிஷங்கர் பிரசாத், தவறை ஒப்புக்கொண்டு வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், இந்த விஷயத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.

எந்தவொரு தனிப்பட்ட தகவல்களும் பகிரப்படுவது சட்டவிரோதமானது. இந்த விஷயம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சாக்ஷி, ரவிஷங்கர் பிரசாத்தின் துரித நடவடிக்கைகளுக்கும், ட்விட்டரில் பதிலளித்ததற்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.

டோனியின் மனைவி தனத கணவர் ஆதார் தகவல்கள் வெளியானது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் காரசாரமாக டுவிட் செய்தது, அத்ன் காரணமாக UDAI நிறுவனத்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது  டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.