ரியாத்:

உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு வரும் 29ம் தேதி முதல் பொதுமன்னிப்பு அளித்து சவுதியில் இருந்து வெளியே வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த தகவலை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

29ம் தேதி முதல் 90 நாட்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும். சட்டவிரோத குடியேற்ற மக்கள் இல்லாத ந £ட்டை உருவாக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக சவுதி ‘‘பொது மன்னிப்பு 2017’’ என்ற இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. பயண ஆவணங்களை வழங்க சவுதி அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கெ £ள்ளப்படுகிறது.

இந்தியாவுக்கு திரும்ப 3 ஆவணங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

1. பயண ஆவணங்கள் & செல்லத்தக்க பாஸ்போர்ட் அல்லது அவசர சான்றிதழ்/வெளியேற அனுமதி

2. வெளியேறும் விசா.

3. டிக்கெட்

# இந்த ஆவணங்களை யாரிடம் இருந்து பெறுவது?

1. பயண ஆவணம்: தூதரகம் அல்லது துணை தூதரகம்.

2. வெளியேறும் விசா: சவுதி அரசு.

3. டிக்கெட்: இது சுயமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் இது குறித்த தகவல் பெற தூதரக கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இலவச அழைப்பு 8002471234: ஹெல்ப் லைன் +966 114884697.