அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சசிகலாவின் விளக்கத்துக்கு பதில் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மார்ச் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் இன்று 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து விரைவில், தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.