
ராமேஷ்வரம்,
மீன்பிடிக்க சென்ற ராமேஷ்வரம் பகுதி மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது கண்டனத்துக்குரியது என்றும், இலங்கை உடனான பேச்சுவார்த்தையை மீறி துப்பாக்கி சூடு நடந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel