புனே,
நேற்று புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ஸ் மேட்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி டக் அவுட் ஆனது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளாக டக்அவுட் ஆவதை தவிர்த்து வந்த கோலி நேற்று மேட்சில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினார்.
ஒரு நாள் போட்டி, டி20 போட்டி ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து தொடர்ச்சியாக 104 இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் இருந்த கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆட்டம் இழந்தார்.
அவர், கடைசியாக 2014-இல் கார்டிஃப்பில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டாகியிருந்தார்.
தற்போது 54-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் கோலி, 5-ஆவது முறையாக டக் அவுட்டாகியுள்ளார்.
அதேநேரத்தில் சொந்த மண்ணில் அவர் டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டாவது இதுவே முதல்முறையாகும்.