சென்னை:
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஓபிஎஸ் வீடு வழியே காரில் சென்ற நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் வடிந்தது. அதேபோல் போலீஸ்காரர் ஒருவரது மண்டையும் உடைந்தது.
இதனால் கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு நிலவுகிறது.
Patrikai.com official YouTube Channel