டெல்லி:

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (என்சிஇஆர்டி) பாடப் புத்தகங்களை தான் பயன்படுத்த வேண்டும். வரும் 2017&18ம் ஆம் கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எ டுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள லட்சகணக்கான பெற்றோருக்கு இந்த அறிவிப்பு நிம்மதியை ஏற்படுத்த கூடியதாகும். என்சிஇஆர்டி புத்தகங்களை விட 300 முதல் 600 மடங்கு அதிகமான விலை கொண்ட வேறு பதிப்பக புத்தகங்களை வாங்க சொல்லி பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவது இனி இருக்காது.

நாடு முழுவதும உள்ள 680 முகவர்களிடம் புத்தகங்கள் மார்ச் இறுதியில் மோதுமான அளவில் என்சிஇஆர்டி அனுப்பி வைக்கும் என்று மனித வள மேம்பாட்டு துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் இந்த மாதம் 22ந் தேதிக்குள் எவ்வளவு புத்தகங்கள் தேவைப்படும் என்று சிபிஎஸ்இ ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். என்சிஇஆர்டி புத்தகங்கள் போதுமான அளவிலும், குறித்த நேரத்திலும் சந்தையில் கிடைப்பதில்லை என்று பள்ளி நிர்வாகம், பெற்றோரிடம் இரு ந்து வந்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பதிப்பங்கள் பள்ளியிலேயே ஸ்டால் அமைத்து புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதும், தேவையில்லாத ஸ்டேஷனரி பொருட்களையும் பெற்றோர் தலையில் கட்டுவதாக புகார் வந்துள்ளது. இதற்கு வெகுமதியாக பள்ளி தலைமை பொறுப்பில் இருப்பவர்களை சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும், சிபிஎஸ்இ கவனத்து க்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் பயில்கிறார்கள் என்ற விபரம் சிபிஎஸ்இ வசம் உள்ளது. அதனால், இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி நிர்வாகங்கள் புத்தகங்களை வாங்குகிறதா என்பது அடையாளம் காணப்பட்டுவிடும். புதிய மாணவர் சேர்க்கை இருந்தால் மட்டுமே இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.