அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் முதல்வராவது உறுதியாகியிருக்கிறது.
அ.தி.மு.க. பிளவுபட்டிருந்த நேரத்தில் 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா அணி சார்பாக சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதுதான் அவரது முதல் தேர்தல்.
பிறகு, 1991 2011 2016 ஆகிய தேர்தல்களில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
1998 வருட பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1999 2004 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி அடைந்தார்.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வென்று நெடுஞ்சாலை அமைச்சர் ஆனார். 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனார்.
தற்போது அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.