அ.தி.மு.க. சசிகலா அணியால் முதல்வராக முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்துள்ளார். பதினைந்து நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வளர்மதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், “நல்ல செய்தி இது. மிக நல்ல செய்தி. நல்லா… நல்லா யோசிச்சு இந்த முடிவை ஆளுநர் எடுத்திருக்கிறார்.
தியாகத்தலைவி சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி முதல்வராக போகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) அவர்கள் எப்படி ஏழை எளிய மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கும்படி ஆட்சி செய்தாரோ.. அதே போல எடப்பாடி பழனிச்சாமியும் செயல்படுவார்.
அம்மாவின் பொற்கால ஆட்சி, சின்னமமாவின் வழிநடத்துதலில் சிறப்பாக நடைபெறும்” என்று தெரிவித்தார் வளர்மதி.
கட்சியின் இன்னொரு மூத்த தலைவரான கோகுல இந்திரா, “ஆளுநரின் முடிவு மிகவும் மிகழ்ச்சி அளிக்கிறது. இது துரோகிகளுக்குக் கிடைத்த தோல்வி. நீதிக்குக் கிடைத்த வெற்றி.
அ.தி.மு.க. என்னும் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்று தெரிவித்தார்.