ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைகழகப் பேராசிரியர் ஜெஃப் ஹேன்காக் தமது வகுப்பு மாணவர்களுக்கு வித்தியாசமான வீட்டுப்பாடங்கள் கொடுப்பவர். கடந்த 2008ம் ஆண்டிற்கு முன்னர்வரை அவர் வார இறுதியில் மாணவர்களிடன், 48 மணி நேரத்திற்கு “வலைத்தளங்களை “ பயன்படுத்தாமல் இருந்துவிட்டு, திங்கட்கிழமை வந்தது தங்களின் அனுபவத்தைப் பகிந்துக்கொள்ளுங்கள் எனக் கேட்பது வழக்கம். ஆனாக், 2009ம் ஆண்டில் மாணவர்கள் “இது தங்கலின் சுதந்திரத்தினை பாதிக்கும் எனப் போர்க்கொடித்தூக்கினர். இந்த வீட்டுப்பாடத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். வேறுவழி இல்லாமல், பேராசிரியர் அதனைக் கைவிட வேண்டியதாய் போயிற்று. அவ்வாண்டு முதல் பேராசிரியர் ஜெஃப் ஹேன்காக், இந்தச் சோதனை முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.
2009ல் இவ்வாறு மாணவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள் என்றால், தற்போது தகவல் தொழிநுட்பம், சம்மொகவலைத்தளங்களின் ஆதிக்கம், இலவச ஜியோ சிம்கார்ட், மிகக்குறைந்த விலையில் டேட்டா பேக்குகள் கிடைக்கும் 2017ல் ஒருவரால் இன்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்து விடமுடியுமா ?
வர்தா புயல் வந்தது ஒரு வாரம் மின்சாரம் இல்லாதபோது கூட மனிதர்கள், அலுவலகங்கள், மின்சாரம் இருக்கும் பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு சென்று அலைபேசியை சார்ஜ் செய்து இணையத்தை பயனபடுத்தியதைப் பார்த்தோம். கடந்த வருடம் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு புரட்சியின் போதும், மக்களை ஒருங்கிணைக்கச் சமூகவலைத்தளங்களை, மாணவர்கள் முதல் முதியோர் வரை பயன்படுத்திய வருவதை அறிவோம்.
இந்நிலையில், வலைத்தளம் பயன்படுத்தாமல், ஒருவரால் இருக்க முடியுமா?
அல்லது, ஒரு நாள் இணையத்தளம் வேலை செய்யவில்லை என்றால் என்னவாகும் ?
1995ல், உலக மக்கள் தொகையில், 1 சதவிகிதம் பேர் பயன்படுத்திய வந்த இனையத்தள சேவை. 20 வருடங்களில் விஸ்வரூபம் எடுத்து 3.5 பில்லியன் மக்கள் தற்போது இனையத்தள சேவைவை பயன்படுத்திய வருகின்றனர்.
அதாவது, பூமியில் உள்ள மக்கள்தொகையில் இது பாதியாகும். மேலும், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு வினாடிக்கு 10 பேர் என அதிகரித்தவண்ணம் உள்ளது.
பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், 20 சதவிகிதம் பேர் குறிப்பிட இடைவெளியில் இணையத்தை பயன்படுத்திவருகின்றனர். 73 சதவிக்டம் பேர் தினமும் பயன்படுத்துவதாய் தெரிவித்துள்ளனர். 2016ல் நடத்தப்பட்ட ஒரு சர்வே முடிவில், 90% மக்கள் கடந்த மூன்று மாதங்களில், இணையத்தை பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரியவந்தது. பெரும்பான்மையானோர், இணையவசதியை பயன்படுத்தாமல் இருக்கும் நாளை நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லையென கருத்து தெரிவித்துள்ளனர்.
“சமூகம் மற்றும் இனையம்” எனும் நூலாசிரியரும், மிசிகன் பல்கலைக்கழகப் பேராசிரியருமான வில்லியம்ஸ் தட்டன், “இன்று இணையத்தினால் விளையும் முக்கியப் பிரச்சனை என்னவென்றால், நாம் நமது அன்றாட வாழக்கையை இனையம் பெருமளவில் கட்டுப்படுத்தும் அளவிற்கு அடிமையாய் மாறியுள்ளோம். இணயம் இல்லாமல் இருக்க முடியாது என நம்புகின்றனர்” என்றார்.
இனையத்தை முடக்குவது என்பது நடக்க முடியாத விசயமல்ல.
பல்வேறு அரசுகள், தம்து அடக்குமுறைக்கு எதிராக மக்கள் போராடும் இடங்களில் எல்லாம் இணைய வசதியை முடக்குவதை நாம் காண முடிகின்றது. உதாரணத்திற்கு, காஷ்மீரில், மக்கள் பெல்லட் குண்டுகளை முகங்களில் வாங்கிக்கொண்டு போராடிய போதும், மணிப்பூரில் மக்கள் கிளர்ச்சி செய்த போதும், அங்கு இணைய சேவை முடக்கப்பட்ட்து, முடக்கப்பட்டு வருகின்றது.
“இந்தியாவில், பணமதிப்பிழக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, “பேடிஎம் பயன்படுத்துங்கள் எனப் பிரதமர் தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரத்தூதராய் குரல் கொடுக்கும் போதும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்திய அரசு இணையசேவையை முடக்கி இருந்தது என்பதை மறுக்க முடியாது.
சில அரசுகள் அந்நாட்டின் இணையச் சேவையையே ஒரே சுவிட்ச் ((kill switch)) மூலம் நிறுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளன. எகிப்து நாடு 2011ல் புரட்சி நடந்தபோது இந்தச் சுவிட்சை (kill switch) பயன்படுத்தி இணையச் சேவையை முடக்கி போராட்டக் காரர்கள் ஒருங்கிணையவிடாமல் தடுத்தது.
துருக்கி மற்றும் ஈரான் நாட்டிலும் போராட்டத்தின்போது இணையச் சேவை நிறுத்திவைக்கப் பட்டது.
அமெரிக்காவிலும் இத்தகைய சுவிட்ச் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய சுவிட்ச் ஏற்பாடு செய்வது சுலமானதல்ல. முன்னேரிய நாடுகளில் இது மிகவும் சிக்கலானது.
இவைத்தவிர, பல்வேறு காரணங்களால் இணையச்சேவை முடக்கப் பட வாய்ப்புள்ளது.
“ஹேக்கர்கள்” உள் புகுந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தையே முடக்கியுள்ளனர். இவ்வாறு ஒரு நாடு, இன்னொரு நாட்டின் அனைத்து அரசு இணையத்தளங்களையும் முடக்கும், “இணையப் போரினை தொடுக்க முடியும். சீனாவால், இந்திய வலைத்தளங்களுக்கு ஆபத்து உள்ளது.
ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு கடலுக்கடியில், பாயும் கேபிள் பழுதடைந்தாலும், இணைய சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மத்திய கிழக்கு, இந்தியா, மற்றும் தெங்கிழக்கு ஆசியாவிற்கிடையேயான இணையவசதி பாதிக்கப்பட்ட்து.
இணையத்தை தடை செய்வதால், மன ரீதியிலும் மக்கள் பாதிக்கபடுவர்.
தற்போதைய இணையப் பயன்பாடு, ஒருவருடன் ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்யவே அதிகம் பயன்படுத்தப் படுகின்றது. பேஸ்புக், வாட்ஸப், வீசாட், ஸ்கைப் போன்ற பயன்பாடு தடைப்பட்டால், மக்கள், தனிமை, மன அழுத்தம், தாழ்வுமனப்பான்மை போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும் என்பதைப் போல், இணையத்தின் அருமை, அது இல்லாதபோது தான் தெரியும்.
நாம் ஒவ்வொருவரும், நாமாகவே, போதிய இடைவெளியில், ஒரு நாள் முழுவதும் இணையம் பயன்படுத்தாமல் இருக்கப் பழக வேண்டும். அதுவே நம்மை அவசியக் காலத்தில், இணையம் இல்லாமல் கவலையின்றி வாழ உதவும்.