பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு பதிவாளர் தெரிவித்து உள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது.

இதனால், சசிகலா உள்ளிட்ட 3 பேரும் தங்களது 4 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவிக்க பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து,  சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தின் அறை எண் 48ல் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன்  கூறியுள்ளார்.

மேலும் சிட்டிசிவில் கோர்ட்டு நீதிபதி நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் அறை எண் 48-ல் ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பூட்டி வைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.