டில்லி,
ஜெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா குடும்பத்தினர் குடியிருந்தனர் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாட்டையை சுழற்றி உள்ளனர்.
ஜெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் அடைக்கலம் புகுந்தது வாழ்வாதாரத்துக்கோ அல்லது ஜெயலலிதா தங்கச் சொன்னதற்காகவோ அல்ல.
மாறாக அவரது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவர்கள் குடியேறியுள்ளனர் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பாக கூறியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அ
இதுகுறித்து தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது,
குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு என்று சுயேச்சையான வருவாய் ஆதாரங்கள் இருப்பதாக கூறினாலும் கூட, அவர்கள் வைத்திருந்த நிறுவனங்கள், நிலங்கள், பணம் உளளிட்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, அவை அனைத்தும் ஜெயலலிதா மூலமாக வந்தது தெரிய வருகிறது என்று கூறியுள்ளது.
அவர்களை தனது வீட்டில் தங்க அனுமதித்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை தனது வீட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது ஜெயலலிதா அவர்களை தாராளமாக புழங்க அனுமதித்தார் என்பதற்காகவோ அந்த மூன்று பேரும் ஜெயலலிதா வீட்டில் தங்கவில்லை.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் கிரிமினல் சதித் திட்டத்துடன்தான் இந்த மூன்று பேரும் அங்கு தங்கியிருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் சாட்டையடியாக கூறி உள்ளனர்.